சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் ‘புஷ்பா’. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்திஅ இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகிவருகிறது. ஏற்கனவே படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் முதல் சிங்கிள் வரும் 13ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. அதன்படி புஷ்பா முதல் பாகம் வரும் கிருஸ்துமஸ் தின ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வர்வேற்பை பெற்றன, இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் மலை கிராமத்து பெண்ணாக புதிய அவதாரத்தில் ராஷ்மிகாவின் தோற்றம் உள்ளது. ராஷ்மிகாவிற்கு இதில் ஸ்ரீ வள்ளி எனும் கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.









