---Advertisement---

தாலிபான்கள் புதிய கட்டுப்பாடு- ஷேவிங் செய்யக்கூடாது

Published on: September 28, 2021
---Advertisement---

ஆப்கனில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் தாலிபன் என்ற தீவிரவாத அமைப்பு ஆட்சியை கையில் எடுத்து இஸ்லாமிய பழமைவாத சட்டங்களை நிறைவேற்றுகிறேன் என அங்குள்ள மக்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தியது. பெண்கள் படிக்க கூடாது, இசை கேட்க கூடாது என பலவித கொடூரமான கட்டுப்பாடுகளை விதித்தனர்

2000க்கு பின் ஓசாமா தேடுதல் வேட்டையில் அமெரிக்க படைகள் ஆப்கனை கைப்பற்றியதால் அங்கு ஜனநாயக ஆட்சி கொண்டு வரப்பட்டது. 20 ஆண்டுகளாக அங்கு மக்கள் நிம்மதியாக இருந்தனர். பழமையாக இருந்த ஆப்கன் புதியதாக மாறியது.

அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு வெளியேறியதால் மீண்டும் தாலிபான் ஆட்சியை பிடித்து மக்களை துன்புறுத்தி வருகின்றனர். தினம் ஒரு சட்டம் கட்டுப்பாடு என போட்டு மக்களை வறுத்து எடுக்கின்றனர்.

தற்போது புதிய சட்டமாக ஆப்கன் மக்கள் தாடியுடன் தான் இருக்க வேண்டும் அதை  திருத்த கூடாது என புதிய சட்டம் இயற்றியுள்ளனர்.

இதனால் ஆப்கன் மக்கள் என்ன செய்வது என விழி பிதுங்கியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.