இரு தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களுக்கு விசிட் அடித்து மேற்பார்வையிட்டார். அங்குள்ள தீர்த்த கிணறுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார் சேகர் பாபு.
பின்பு கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த பிறகு தீர்த்த கிணறுகள் அனைத்தும் திறக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் சேகர் பாபு தென் மாவட்ட பகுதிகளில் விசிட் அடித்தபோது இந்து சமய அறநிலையத்துறை என்பதற்கு பதிலாக அறநிலையத்துறை என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தார்களாம். இதை எல்லாம் அவர் கண்ணில் படாதா அவரை முதல்வர் செயல்பாபு என்கின்றார் அவர் செயல்பாபு அல்ல சினேக்பாபு என்று ஹெச்.ராஜா பேசி இருக்கிறார்.







