---Advertisement---

பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு

Published on: September 25, 2021
---Advertisement---

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என தென்னக மொழிகள் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி புகழ்பெற்றவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்.

ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடல் மூலம் அவர் அறிமுகமானாலும் அவர் இரண்டாவதாக பாடிய சாந்தி நிலையம் படப்பாடலான இயற்கை எனும் இளைய கன்னி என்ற பாடல்தான் முதலாவதாக ரிலீஸ் ஆனது.

அனைத்து மொழிகளிலும் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பி.

எம்.ஜி.ஆர், சிவாஜி ,ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, தற்போதைய தனுஷ் வரை மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடியவர் எஸ்.பி.பி.

இவர் மறைந்தபோது இவருக்கு 70வயதுக்கு மேல் ஆகி இருந்தாலும் சின்னப்பையனுக்கு பின்னணி பாடினால் கூட அந்த சின்னப்பையனின் குரல் போலவே இருப்பதாக நாம் எண்ணுவதுதான் இவரது வெற்றி. அந்த அளவு இவரது பாடல்கள் என்றும் இளமையாக இருக்கும்.

கடந்த வருடம் லேசான கொரோனா தொற்றினால் அவதிப்பட்டு வந்த எஸ்.பி.பி முகநூலில் வந்து நான் ஆஸ்பத்திரி செல்கிறேன் லேசாக உடம்பு சரியில்ல என்று போஸ்ட் போட்டுவிட்டுதான் சென்றார். ஆனால் நாள் ஆக ஆக இவரின் உடல்நிலை மோசமானது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 25 அன்று இயற்கை எய்தினார்.

அவரது குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே படத்தில் அவரது பாடல் வர உள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல்.

இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் காணும் எஸ்.பி.பியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போற்றி வருகின்றனர். நாமும் அவரை நினைவு கூர்வோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!