---Advertisement---

விநாயகர் ஊர்வலத்தடை- முதல்வர் விளக்கம்

Published on: September 7, 2021
---Advertisement---

வருடா வருடம் வரும் விநாயகர் சதுர்த்தியன்று மிகப்பெரிய பிரமாண்ட விநாயகர் சிலைகளை தயார் செய்து அதை கோவில் மற்றும் பொது இடங்கள் முன்பு வைத்து ஒரு வாரத்துக்கு பின் அதை ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பது வழக்கம்.

இந்த வருடம் இது போன்ற விழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. பாஜக மற்றும் இந்து முன்னணியினர் இந்த தடையை கடுமையாக எதிர்த்தனர். பாஜக தலைவர் அண்ணாமலை இந்த தடையை எதிர்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு எல்லோரும் கடிதம் அனுப்புங்கள் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவில் ஓணம், மற்றும் பக்ரீத்துக்கு இது போன்று விலக்கு அளித்து அவை கொண்டாடப்பட்டதால் அங்கு கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது அதனால்தான் இந்த தடை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.