நகைச்சுவை நடிகர் சூரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதில் பலருக்கும் தெரியாத விசயம் சூரியின் தம்பிக்கும் இன்றுதான் பிறந்த நாளாம். ஆம் சூரியும் அவரது சகோதரரும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்களாம்.
இது குறித்து கூறியுள்ள சூரி,
ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன். உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன். என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி… அடுத்த ஜென்மத்தில் எங்கள் அனைவருக்கும் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன் பிறந்தநாள்
தம்பி என கூறியுள்ளார்.







