---Advertisement---

பாலிவுட் நடிகர் பாடகர் மீது மனைவி வழக்கு

Published on: August 5, 2021
---Advertisement---

பாலிவுட்டின் பிரபல பாடகர் ஹனி சிங் இவர் பாடகர் மட்டுமல்லாது நடிகரும் கூட. இவரது மனைவி ஷாலினி தல்வார் இவரும் பாடகியாவார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் இவர் பாடியுள்ளார்.

இந்நிலையில், ஷாலினி தல்வார் டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் தனது கணவர் மீது பரபரப்பு புகாரை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது கணவர் ஹனி சிங் என்னை உடல், மனம், வார்த்தைகளால் துன்புறுத்தி வருகிறார். எங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பாடகரான அவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, என்னை அவர் மதிப்பதில்லை. மாறாக அவர் என்னை துன்புறுத்த தொடங்கினார். மதுபோதைக்கு அடிமையான அவர் என்னை பல வகையிலும் கொடுமைப்படுத்தி வருகிறார்.

பல பெண்களுடன் அவர்  பாலியல் ரீதியான தொடர்பில் உள்ளார்’ என்று ஷாலினி தல்வார் தெரிவித்துள்ளார்.அவரின் வக்கீல்கள், நீதிபதியிடம் முறையிடுகையில், ‘எதிர்மனுதாரரின் பெயரில் உள்ள சொத்துகளை தனிநபரோ, கூட்டாகவோ மூன்றாம் நபருக்கு விற்கவோ, தானம் செய்யவோ தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். இந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்  ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும், இந்த வழக்கை ஆக. 28ம் தேதி விசாரிக்க உள்ளதாகவும் கூறினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana revealing plot details of the upcoming Ravi Teja starrer Irumudi.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் உண்மையான கதைக்களத்தை வெளிப்படுத்திய இயக்குநர் சிவா நிர்வாணா!

Box office success poster of Lokesh Kanagaraj's DC movie grossing ₹50 Cr worldwide in 4 days.

4 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் சாதனை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்!

Actress Janhvi Kapoor appearing in the Delhi High Court regarding her deepfake lawsuit.

“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!

Seeman reportedly roped in for a powerful role in Sivakarthikeyan's Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணையும் சீமான்: சக்திவாய்ந்த மற்றும் கெத்தான வேடத்தில் நடிக்க சம்மதம்!

Actor Vishal talking candidly about his experience with director Mysskin.

மிஸ்கின் இயக்கத்தில் நடிப்பேன், ஆனால் தயாரிப்பாளராக மாட்டேன்: இயக்குநர் மிஸ்கின் குறித்து நடிகர் விஷாலின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!

Official note released by producer Vishnnu Vishal regarding parting ways with director Arunraja Kamaraj.

விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா காமராஜ் படம் டிராப்!