---Advertisement---

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும் புகழ்

Published on: July 27, 2021
---Advertisement---

விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றவர் புகழ். பின்பு விஜய் டிவியில் வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் புகழ் உலகெங்கும் பரவியது.

புகழுக்கு பட வாய்ப்புகளும் வரத்தொடங்கியது இந்த நிலையில் ‘காசேதான் கடவுளடா’ ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க புகழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சிவாங்கி, கருணாகரன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தனியார் டிவி சமையல் நிகழ்ச்சியால் பிரபலமான புகழ் இணைந்துள்ளார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் புகழ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.