---Advertisement---

அஜீத்துக்கு நன்றி தெரிவித்த சார்பட்டா படத்தின் வில்லன்

Published on: July 24, 2021
---Advertisement---

என்னை உற்சாகப்படுத்தியதற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி அஜித் சார் என “சார்பட்டா பரம்பரை” படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் தெரிவித்துள்ளார்.

“சார்பட்டா பரம்பரை” அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது “சார்பட்டா பரம்பரை” படத்தின் வேம்புலி கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பை அஜித்துக்குச் சமர்ப்பித்துள்ளார் ஜான் கொக்கென்.

“சார்பட்டா பரம்பரை” படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் தனது பேஸ்புக் பக்கத்தில், “#thalaajith #Veeram படப்பிடிப்பின்போது உங்களுடன் நான் செலவழித்த நேரம் என் வாழ்க்கைக்கான பாடமாக மாறியது. ஒவ்வொரு நாளும் கடின உழைப்பை செலுத்த நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.

என்னை உற்சாகப்படுத்தியதற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி. என்னை சிறந்த மனிதராக இருக்கவும் ஊக்குவித்தீர்கள். தற்போது வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!