சமீபத்தில் பேட்டியளித்த இசையமைப்பாளர் இளையராஜா இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு பாடலை ஒருவர் எப்போது கேட்டாலும் அது சற்று முன் பூத்த பூ போல இருக்க வேண்டும். எப்போது கேட்டாலும் அது புதிது போல, புதிதாக மெட்டமைக்கப்பட்டது போல இருக்க வேண்டும். அப்படியான பாடல்களை நோக்கித்தான் நமது மனம் எப்போதும் செல்லும். இதனால் தான் பழைய பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். ஏனென்றால் அந்தப் பாடல்கள் இன்றும் புதுமையான தன்மையை பெற்றிருக்கிறது” என்று இளையராஜா பேசியுள்ளார்.
கொரோனா பிரச்சினைகளால் தனது இசையமைக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் இளையராஜா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு கருணாநிதியிடம் இது பற்றி பேசியிருந்ததாகவும் இளையராஜா கூறி இருந்தார்.









