---Advertisement---

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா- கலைப்புலி தாணுவின் பதில்

Published on: July 3, 2021
---Advertisement---

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றிய பேச்சுக்கள் செய்திகள்தான் இரண்டு நாட்களாக உலா வருகிறது. இந்த மசோதாவிற்கு நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயக்குனர் வெற்றி மாறன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் இச்சட்டம் குறித்து எதிர் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒளிபரப்பு திருத்த வரைவு மசோதா நிறைவேறினால் படைப்பளிகள் மட்டும் அல்ல அந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும்தான் முதல் பாதிப்பு ஏற்படும். ஒரு பிரச்சனை என்றால் இவர்கள் மூவரும் தான், தெருவுக்கு வந்துவிடுவார்கள்.

திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும். இது யாரை பழிவாங்க என்று தெரியவில்லை. இது அநியாயம், மிகக்கொடுமை எனவும் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில்தான் திரைத்துறைக்கு மிகப்பெரிய சுதந்திரம் இருக்கிறது.  நாட்டை ஆளக்கூடியவர்களையே நாடுகடத்தும் காட்சிகளை திரைப்படங்களில் வைக்கிறார்கள். நாம் அப்படி செய்வதில்லை. ஒரு நாட்டையே தவறாக சித்தரிக்கக்கூடிய படத்தை நாம் தடை செய்யலாம் அது தவறில்லை.

எங்கேயோ ஒரு மூளையில் அவ்வாறு தவறாக எடுக்கப்படும் படங்களை முறைபடுத்தி சரி செய்யவேண்டுமே தவிர, இப்படி ஒட்டுமொத்தமாக திரைத்துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவது அநியாயம். ஆனவன் ஆகாதவன்னு யாரோ ஒருவன் அளிக்கக்கூடிய புகாரை வைத்து படத்தை நிறுத்தி விட்டால் என்ன செய்வது.? வளர்ந்து வரும் ஒரு நடிகர் புதுப்படத்தில் நடிக்கும் போது அதற்கு எதிராக ஒருவர் புகார் அளித்து படத்தை தடை செய்தால் என்ன செய்ய முடியும் என கலைப்புலி தாணு கூறியுள்ளார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!