தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவையே துவம்சம் செய்து வருகிறது.தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர் . திரைப்பட கலைஞர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் கொரோனாவுக்கு பலியாகி வருவது துரதிருஷ்டவசமாகவே பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து கூறியுள்ள நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி, போன மாதம் விவேக் அவர்கள் . போன வாரம் நடிகர் பாண்டு. நேற்று முன்நாள் ஜோக்கர் துளசி. நேற்று நெல்லை சிவா , இன்று இப்பொழுது காமெடி நடிகர் மாறன். தமிழ் சினிமா சிரிப்பை தொலைத்து கொண்டிருக்கிறது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.







