---Advertisement---

மணிவண்ணன் போன்ற அறிவாளி சினிமாவில் கிடையாது- நடிகர் சந்திரசேகர்

Published on: March 17, 2021
---Advertisement---

இயக்குனர் சித்ரா லட்சுமணனின் சேனலில் நடிகர் சந்திரசேகரின் பேட்டி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மறைந்த நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் குறித்த கேள்விக்கு சந்திரசேகர் அளித்த பதில்.

மணிவண்ணனும் நானும் நெருங்கிய நண்பர்கள். எங்க வீட்லயே சாப்பிட உட்காரும்போது எங்கம்மா சொல்லுவாங்க இப்போ என்ன அவசரம் மணிவண்ணனும் வந்துரட்டுமே ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க என சொல்வார் அந்த அளவுக்கு எங்க வீட்டாரிடையேயும்  மணிவண்ணன் தான் செல்லப்பிள்ளை.

அவன் டிரிங்க்ஸ் பண்ணுவான் பண்ணிட்டு மிகப்பெரிய காரல் மார்க்ஸ் புத்தகத்தையோ வேறு ஏதாவது ஆங்கில புத்தகத்தை மிக தெளிவாக படித்து அறிந்து கொள்வான். மது அருந்தும் ஒருவருக்கு இது போல டக்கென்று வாசித்து புரிந்து கொள்வது கஷ்டம் அதை மணிவண்ணன் இயல்பாக செய்வான். அவன் உடலை அவனே கெடுத்துக்கொண்டான் என்ற வகையில் சந்திரசேகர் கூறினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.