மாஸ்டர் மேக்கிங் இன்று வெளியீடு

மாஸ்டர் மேக்கிங் இன்று வெளியீடு

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த மாஸ்டர் படம் கொரோனா கட்டுப்பாடுகளால் ரிலீஸ் ஆக முடியாமல் முடங்கி கடந்த ஜனவரி 13ல் ரிலீஸ் ஆனது. கடந்த ஜனவரி 29ல் படம் வந்து 15 நாட்களுக்குள் அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் வெளியானது.

இந்த படம் வெளிவந்து இன்றுடன் 25 நாட்கள் ஆனதை ஒட்டி இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்த வீடியோ மற்றும் ஒரிஜினல் சவுண்ட் ஸ்கோர் இன்று மாலை 6மணிக்கு ஸ்பெஷலாக வெளியிடப்படுகிறது.