ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்று சொன்னாலும் சொன்னார் ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் அவர் நமக்காவது ஆதரவு அளிப்பார் என்று சொல்லி வருகின்றனர். அதிமுகவினர் ரஜினி நமக்கு ஆதரவு அளிப்பார் என்று சொல்லி வருகின்றனர்.
விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ரஜினி அதிமுகவுக்குதான் ஆதரவு அளிப்பார் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அதே கருத்தை ஆதரித்து பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆர் அரசாகவே நடைபெற்று கொண்டிருக்கும் அதிமுகவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிக்க வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.













