வருகிற ஜனவரி மாதம் தைப்பொங்கல் திருநாள் வருகிறது. அனைத்து தரப்பினரும் மகிழ்ந்து சிறப்பித்து கொண்டாடும் ஓர் திருவிழாதான் தைப்பொங்கல் திருவிழா. இன்று எடப்பாடியில் சென்றாயபெருமாள் கோவிலில் வழிபாடு செய்து விட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது முதல்வர் கூறியதாவது,
வருகிற தைப்பொங்கல் தினத்தை ஒட்டி ஜனவரி 4ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் இரண்டு கோடியே ஆறு லட்சம் கார்டுதாரர்களுக்கு 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
அதோடு அரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ ஒரு முழு கரும்பு, உலர் திராட்சை , முந்திரி, ஏலக்காய் மற்றும் நல்ல துணிப்பை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.













