---Advertisement---

கோவையின் சிறந்த மனிதர் சாந்தி சோஷியல் சர்வீஸ்

Published on: December 11, 2020
---Advertisement---

கோவை சிங்கா நல்லூரில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தவர் சுப்பிரமணியம். இவரை தெரியாத கோயம்புத்தூர்காரர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் மிக குறைந்த விலையில் மதிய உணவு உட்பட பல உணவுகளை தினசரி வழங்கி வருகிறார். வெறும் 20 ரூபாய் இருந்தால் நன்றாக சாப்பிட்டு வரலாம். 20 ரூபாய்க்கு கொடுக்கிறார் என்பதற்காக ஏனோ தானோவென்று இல்லாமல் உயர்தர சைவ உணவகத்தில் என்ன மாதிரி வெரைட்டியான சாப்பாடு கொடுப்பாங்களோ அதே அளவு இவரும் கொடுத்து மதிய சாப்பாடு தினசரி 3000 பேருக்கு குறைந்த விலையில் கொடுக்கப்பட்டது.

கோவை நகரத்தில் வேலை செய்து வருபவர்கள் சிங்கா நல்லூரிலேயே அறை எடுத்தும் வீடு எடுத்தும் தங்கியுள்ளனர் இதற்கு காரணம் மிக மிக குறைந்த விலையில் இங்கு சாப்பாடு கிடைப்பதுதான்.

பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரிடமும் பெயர் பெற்ற  சாந்தி சோஷியல் சர்வீஸ் சுப்ரமணியம் இன்று காலை காலமானார்.

அவரது மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மிக மிக நல்ல மனிதரான அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்,

அன்னார் ஹோட்டல் ஏழைகளின் நலனுக்காகவே பல. ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. எல்லோரும் அங்கு போய் சாப்பிடலாம். ஹோட்டல் உணவு பொருள்களை அந்த அளவு குறைவான விலைக்கு யாருமே கொடுக்க முடியாது. உதாரணம்: ஒரு தோசை  சாம்பார் சட்னியுடன் ரூ5/-, இரண்டு இட்லி ரூ5/- பொங்கல் 5/- காபி5/- சாப்பாடு 20/- பாயாசம்.
இவருடைய இழப்பு கோவை மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. 60 வயதான சீனியர் சிட்டிசன்களுக்கு ஏழைகளுக்கு தினமும் ஒரு வேளை இலவசமாக சாப்பாடு கொடுத்தார். இப்படிப்பட்ட மாமனிதரை என்றும் நினைவில் நிறுத்துவோம்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Aishwarya Lekshmi speaking to reporters in Nellai about her support for actor Vijay's political party Tamilaga Vettri Kazhagam.

Politics Update: “தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லையே!” விஜய்க்காக வருத்தப்படும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி – வைரல் பேட்டி!

Official announcement poster of actor Vimal’s upcoming web series Warrant from the world of Vilangu.

OTT Update: “விலங்கு உலகத்திலிருந்து மீண்டும் ஒரு த்ரில்லர்!” மே 22-ல் வெளியாகும் விமலின் ‘வாரண்ட்’ – ரசிகர்கள் குஷி!

Director Mari Selvaraj and actor Kathir planning for the sequel of the hit movie Vaazhai.

Vaazhai 2 Update: “மாரி செல்வராஜின் அடுத்த மாஸ்டர்பீஸ்!” வாழை 2 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. நெட்பிளிக்ஸ் உடன் கைகோர்ப்பு?

Musician Sai Abhyankar expressing his admiration for actor Vijay in a recent interview

Trending: “விஜய் சார் படங்களுக்கு இசையமைக்க ஆசை!” – சாய் அபயங்கரின் நிறைவேறாத கனவு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

A symbolic image representing the cinema strike in Kollywood with a clapperboard and empty film sets.

Kollywood Strike: “இன்று ஒரு நாள் சினிமா வேலைநிறுத்தம்!” 40 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து.. பின்னணி என்ன?

A movie review poster of Dhanush's Kara featuring key highlights like 'Intense Heist Thriller' and 'Terrific Performance'.

Kara Movie Review: “தனுஷின் அசுர நடிப்பு.. மிரட்டும் பின்னணி இசை!” கர திரைப்படம் எப்படி இருக்கு? இதோ முழு விமர்சனம்!