வங்க கடலில் உருவான புரவி புயல் இலங்கையில் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு அப்படியே தமிழ்நாட்டுக்குள் வந்தது. தமிழ்நாட்டில் பாம்பன் அருகே நிலைகொண்ட புயலால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது ஆனால் இதுவரை கனமழை பெய்யவில்லை.
இந்நிலையில் நேற்று புயல் வலு இழந்து விட்டதால் புயல் அபாயம் நீங்கியது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 6 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
புரவி புயல் அச்சுறுத்தலால் இன்று மதியம் 12 மணி வரை மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.













