அந்தக்கால ராஜாதிராஜா படத்தில் இருந்து ரஜினிகாந்தின் அரசியல் வசனங்கள் பாடல்கள் வரத்துவங்கி விட்டன. முத்து படத்திலும் இது பற்றிய வரிகள் எல்லாம் வந்தன.
தொடர்ந்து 1996ல் தமாகா திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை கொடுத்தார். பின்பு பலமுறை கட்சி ஆரம்பிக்கிறேன் என சொல்லி தனது தொண்டர்களை அழைத்து பேசினார்.
இந்த நிலையில் நீண்ட நாளாக இழுபறியாகி கொண்டிருந்த ரஜினியின் கட்சி விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பிக்கும் நாள் வரும் ஜனவரி 31ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020







