---Advertisement---

மாப்பிள்ளை படத்தில் டயலாக்கை மாற்றி சொதப்பிய நிழல்கள் ரவி- ரஜினி சொன்ன ஐடியா

Published on: November 12, 2020
---Advertisement---

நடிகர் நிழல்கள் ரவி சினிமா உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அவர் பல தரப்பட்ட  வேடங்களில் நடித்து வருகிறார். வித்யாசமான வில்லன், காமெடியன், குணச்சித்திரம், ஹீரோ என பல்வேறு வகையான நடிப்புகளை அன்றுமுதல் இன்றுவரை திரையில் பிரதிபலித்து வருகிறார். சமீபத்தில் அவர் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இவர் பல வருடங்கள் முன் வந்த மாப்பிள்ளை படத்தில் வில்லனாக நடித்தார். ரஜினிகாந்த், அமலா, கதாநாயகியாக நடித்த சூப்பர் ஹிட் படம் இது. இப்படத்தில் வில்லனாக நடித்த நிழல்கள் ரவி அடிக்கடி நீட்டே என்று சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையில் படத்தில் சீவிருவேன் என ஸ்டைலாக வசனம் பேசணுமாம் நிழல்கள் ரவி அவர் காரில் வந்து கொண்டிருக்கும்போது முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் படத்துடன் நீட் காங்கிரஸ் நீட் காங்கிரஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததாம். இதை பார்த்த நிழல்கள் ரவி மாப்பிள்ளை படத்தில் எதையாவது வித்தியாசமாக செய்தால் என்ன என நினைத்து சீவிடுவேன் என்ற டயலாக்கை தவிர்க்க நினைத்திருக்கிறார். இதை மனதில் வைத்த நிழல்கள் ரவி , ரஜினியும், ஸ்ரீவித்யாவும் நீண்ட காட்சிகளில் பேசி முடித்த பிறகு நிழல்கள் ரவியை பேச சொல்லி இருக்கிறார்கள் அவரோ சொல்லி கொடுத்த டயலாக்கை சொல்லாமல் நீட்டே என்று இருக்கிறார். எல்லோரும் விவரம் தெரியாமல் குழம்பி இருக்கிறார். மாப்பிள்ளை படத்தின் இயக்குனர் ராஜசேகர் நிழல்கள் ரவியை கடிந்து கொண்டாராம் என்ன ரவி எவ்வளவு பிலிம் வேஸ்ட் ஆயிடுச்சு பாருங்க இப்படி சொதப்பிட்டிங்களே என கூறினாராம். பின்னர் ரஜினிகாந்த் தான் விஷயத்தை கேள்விப்பட்டு இதுவே நல்லாருக்கு ரவி என்று சொல்லி அந்த டயலாக்கையே பேச சொல்லிட்டாராம். அது படத்தில் பெரிய ஹிட் ஆகி படம் முடிந்து வெளியே வந்த பல ரசிகர்களும் நீட்டே என்று சொல்லி சென்றார்களாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!