நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில வருடங்களாக சொல்லும் கதைகளை அவரின் தம்பிகள் ரசித்து கேட்கிறார்களோ இல்லையோ மற்றவர்கள் அந்த கதைகளை பஞ்சராக்கி சீமானின் இந்த பேச்சுக்களை மீம்ஸ்களாக்கி காமெடியாக்கி விடுகின்றனர்.
இலங்கையில் தமிழர் தலைவர் பிரபாகரன் வீட்டில் இவருக்கு விருந்து வைத்து உபசரித்ததாக கூறும் கதைகள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே பிரபலம்.
சமீபத்தில் கூட இட்லிக்குள் கறி இருக்கும் என்றொரு கதையை சொல்லி சமூக வலைதள மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு பெரும் தீனியானார் சீமான்.
இந்நிலையில் புதிதாக ஒரு கதையை சீமான் அள்ளி விட்டுள்ளார் அது என்னவென்றால் எஸ்.பி.பி இலங்கையில் பாட செல்வதற்கு முன் இவரிடம் தான் கேட்டுவிட்டு சென்றாராம். என்னடா தம்பி இப்போ இருக்கிற சூழ்நிலையில அங்க பாட செல்லலாமா என கேட்டாராம்.
இது ஒரு புறம் இருக்க எஸ்.பி.பி பாட்டை சிலாகித்து பேசுகிறேன் என சின்னக்கவுண்டர் படத்தில் அந்த வானத்தை போல மனம் படைச்ச பாடலை கூறியுள்ளார். அந்த பாடல்கள் படத்தில் இரண்டு சிச்சுவேஷனில் வரும் ஒன்று ஜானகி பாடியது மற்றொன்று இளையராஜா பாடியது இது போல முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா பாடலையும் எஸ்.பி.பியின் குரலில் வந்த பாடல்கள் போல இவர் சொல்லி இருப்பது போன்ற மீம்ஸ்கள் உலா வருகின்றன. இருப்பினும் இந்த மீம்ஸ்களை ஆய்வு செய்வதும் அவசியமாகின்றது.
எஸ்.பி.பியை பற்றி ஒரு விசயம் சொல்லிவிட்டதால் அதை கேலி செய்யும் நோக்கிலும் சீமான் பற்றி அதிக மீம்ஸ்கள் உலா வருகின்றன.







