---Advertisement---

வெள்ளிவிழா கண்ட முத்து- கவிதாலயா நிறுவனம் பெருமிதம்

Published on: October 24, 2020
---Advertisement---

கடந்த 1995ம் ஆண்டு தீபாவளி திருநாள் வெளியீடாக அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியான திரைப்படம் முத்து.இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, வடிவேலு, செந்தில், விசித்ரா, ராதாரவி, காந்திமதி என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். அதற்கு முந்தைய வருடம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை திரைப்படம் தீபாவளிக்கு வந்தது அந்த திரைப்படம் கே.எஸ் ரவிக்குமாருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து ஏற்படுத்தி கொடுத்தது அதன் மூலம் ரஜினியை இயக்கும் வாய்ப்பும் ரவிக்குமாருக்கு வந்தது.

இந்த படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

தந்தை மகன் என இரு வேடங்களில் ரஜினி நடித்திருந்தார். தில்லானா தில்லானா உட்பட அனைத்து பாடல்களும் ப்ளாக் பஸ்டர் பாடல்களாக இருந்தன.

சாதாரண மசாலா டைப் கதைதான் இருப்பினும் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படம் தமிழில் மட்டுமல்லாது ஜப்பானிய மொழியில் கூட டப் செய்யப்பட்டு டான்ஸிங் மஹராஜ் என பெயரிடப்பட்டு அந்த நாட்டில் பெரிய வெற்றி பெற்று ஜப்பானிலும் ரஜினிகாந்த் எல்லோருக்கும் தெரிந்த ஸ்டார் ஆனார்.

இப்படம் வந்து 25 வருடங்கள் ஆனதை ஒட்டி கவிதாலயா நிறுவனம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பாபா படத்திற்கு 19 வயது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Kamal Haasan looking thoughtful during a cinematic media event.

30 லட்சத்தில் உருவான படம்… 3 கோடி கொடுத்து நெகட்டிவ் உரிமையை மீட்ட உலகநாயகன்! கமல்ஹாசனின் மாஸ் செயல்!

Promotional portrait of actor Vijay Sethupathi highlighting his upcoming movie releases.

டிசம்பர் முதல் கோடைக்காலம் வரை… தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் விஜய் சேதுபதி! வெளியான மெகா அப்டேட்!

Actor and Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan with Anna Lezhneva.

“பரஸ்பர மரியாதையுடன் பிரிகிறோம்…” ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் – அன்னா லெஷ்னேவா விவாகரத்து அறிவிப்பு!

Producer Prema Chezhiyan and team at the Tokyo International Film Festival for Kagitha Malar premiere.

ஹவுஸ்ஃபுல் ஷோக்களுடன் ஜப்பானை கலக்கிய தமிழ் படம்… சர்வதேச அரங்கில் ‘காகித மலர்’ படைத்த சாதனை!

Actor and content creator Raj Priyan speaking to reporters during an interview in Kovilpatti.

“சினிமாவுக்கு வருவேன்னு எதிர்பார்க்கல…” கோவில்பட்டியில் மனம் திறந்த ‘சீன்’ பட நடிகர் ராஜ் பிரியன்!

Actor Sivakarthikeyan with director Ramkumar Balakrishnan during a movie project discussion.

ஏன் மாறினார் இயக்குனர்? ‘SK27’ படத்தில் இணைந்த தேசிய விருது இயக்குனர்… தயாரிப்பாளர் ஓபன் டாக்!