---Advertisement---

கார்த்தி நடிக்கும் சுல்தான் பட பர்ஸ்ட் லுக் தேதி

Published on: October 23, 2020
---Advertisement---

நடிகர் கார்த்தி தற்போது சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏற்கனவே கார்த்தியை வைத்து கைதி படத்தை தயாரித்த எஸ்.ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடந்தது. பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட்டாக வரும் 26ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது. சுல்தான் என பெயர் வைத்திருப்பதால் இது வரலாற்று படம் கிடையாது என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்படி இருக்குமோ என கார்த்தியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இப்பட பர்ஸ்ட் லுக் வரும் அக்டோபர் 26ம்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.