தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் இசையமைப்பாளர் இனியவன். இவர் தமிழில் இசையமைத்த படங்களில் மிக புகழ்பெற்ற திரைப்படம். இப்படம் 1992ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தின் பாடல்கள் எல்லாம் மிக பிரபலமான பாடல்களாக ஆனது.
குறிப்பாக அருவி கூட ஜதியில்லாமல் என்ற பாடல் மிக புகழ்பெற்றது. சில நாட்களுக்கு முன்பு கூட கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி இருந்தார்.
கவிஞர் வைரமுத்துவுடன் மிக நெருக்கமுள்ளவர் இவர்.
2004ம் ஆண்டு முன்னாள் முதலைமைச்சர் டாக்டர் கலைஞர் முன்னிலையில், கவிஞர் வைரமுத்துவின் ‘கவிதையே பாடலாக – 1’ என்ற பாடல் தொகுப்புக்கு இனியவன் மேடையிலேயே இசையமைத்து பாடல்களை அரங்கேற்றிய விதம் அவருக்குப் பெரும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இனியவன் இன்று காலமானார்.







