கண்டியில் பிறந்த தமிழரான பிரபல இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்து ஓய்வு பெற்ற முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக வர இருக்கிறது. ஸ்ரீபதி இயக்கும் இந்த படத்தில் அச்சு அசலாக அப்படியே முத்தையா முரளிதரன் போலவே ஒப்பனை செய்யப்பட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 800 என இப்படத்துக்கு பெயர் இடப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரன் சிங்களர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தமிழ் அமைப்புகள் கடுமையாக அவரை எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்கு திரையுலகை சேர்ந்தவர்களும் எதிர்த்து வருகின்றனர்.
நடிகரும் இயக்குனருமான பாரதிராஜா விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது பற்றி யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதே போல் நடிகர் விவேக்கும் மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்கள் விரும்புவதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்







