---Advertisement---

40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெருமாள் சிலைகள்-லண்டனில் மீட்பு

Published on: September 17, 2020
---Advertisement---

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ளது அனந்த மங்கலம் என்ற ஊர் இந்த ஊரில் உள்ள ராஜகோபால ஸ்வாமி கோவிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் கடந்த 1978ம் ஆண்டு திருடு போயின.

 

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருந்தாலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமலேயே அந்த வழக்கு அப்படியே ஒன்றுமில்லாமல் போய்விட்டது.சிலைகளை மீட்காமல் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில்

4 வருடங்களுக்கு முன்னதாக, லண்டனில் உள்ள கலைப்பொருள் டீலர்கள் அசோசியேஷன் வெப்சைட்டில் இந்த சிலைகளின் படம் இருந்ததால் இது குறித்து விசாரித்த நிலையில் லண்டனைச் சேர்ந்த தனியார் கலைப்பொருள் நிறுவன டீலர் இந்த சிலையை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்திருந்திருக்கிறார். சிலைகளை விற்பனை செய்வதற்காக வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இது தொல்லியல் துறைக்கும் சிலை கடத்தலை தடுக்க உதவி வரும்‘தி இந்தியா ப்ரைடு ப்ராஜெக்ட்’ அமைப்பினருக்கும் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து ‘தி இந்தியா ப்ரைடு ப்ராஜெக்ட்’ அமைப்பின் இணை நிறுவனர் விஜய்குமார் கூறியது என்னவென்றால் அந்த சிலை விஜயநகர பேரரசு காலத்து சிலை என்பதும், அதனுடன் சேர்ந்த மேலும் சில சிலைகளும் அந்த டீலரிடம் இருக்கலாம் என சந்தேகப்பட்டோம்.

லண்டனில் உள்ள எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட கலைப் பொருள் வியாபாரியின் மியூசியத்தில் வெப்சைட்டில் உள்ள சிலையைப் போன்று

இன்னொரு சிலையும் இருப்பதை படம் எடுத்து அனுப்பினார்கள். அந்தப் படத்தையும் வெப்சைட்டில் இருந்த படத்தையும், புதுச்சேரியில் உள்ள ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட்  போட்டோ ஆவணக் காப்பகத்தில் உள்ள சுவாமி சிலைகள் படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்ததில்

அந்த 2 சிலைகளும் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்ததை ஜூன் 15, 1958-ல் போட்டோ எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறது ஐஎஃப்பி. இதன் அடிப்படையில் தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-யான அபய்குமார் சிங்குக்கு தகவல் தர செய்து சிலைகளை கண்டுபிடித்தோம் என கூறியுள்ளார்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் கோவிலில் அனந்தமங்கலம் கோயிலில் இருந்து ராமர், லட்சுமணர், சீதா, அனுமன்கள் சிலை திருடுபோயிருப்பதை உறுதிப்படுத்தினர். இந்த தகவல் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்திய தூதர்  இதுகுறித்து லண்டன் மெட்ரோபாலிடன் போலீஸுக்குத் தகவல் அனுப்பினார். விசாரணையில், தன்னிடம் ராமர், லட்சுமணர் சிலைகள் மட்டுமல்லாது சீதை சிலையும் இருப்பதையும் ஒப்புக்கொண்ட அந்த டீலர், சிலைகளை ஒப்படைத்து விட்டார். மீட்கப்பட்ட 3 சிலைகளும் நேற்று காணொளி காட்சி வழியே இந்திய தூதரகத்திடம் ஒப்படைப்பட்டது.

இன்னும் 3 வாரங்களில் இந்த சிலைகள் தமிழகம் வந்து சேரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!