---Advertisement---

பொம்மை என்று நினைத்து பாம்பை கடித்த ஒரு வயது குழந்தை… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: August 21, 2024
---Advertisement---

பொம்மை என்று நினைத்து ஒரு வயது குழந்தை பாம்பை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

பீகாரில் விளையாட்டு பொம்மை என்று நினைத்து ஒரு வயது குழந்தை பாம்பை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜமுகர் கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டு பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் கடித்து இருக்கின்றார். குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்த தாய் குழந்தையிடம் இருந்து பாம்பை பிடிங்கி வீசிவிட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றார்.

குழந்தையை பரிசோதித்து மருத்துவர் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்கள். குழந்தை கடித்ததில் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் பாம்பு உயிரிழந்து விட்டது. பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் மழைக்காலத்தில் இந்த வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கம்தான்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க