---Advertisement---

பாய்ந்து வந்த ரயில்…பயத்தில் குதித்த தம்பதி…வீடியோ மோகத்தால் நேர்ந்த விபரீதம்…

Published on: July 15, 2024
---Advertisement---

நாகரீக மாற்றத்தினால் வாழ்க்கையை வாழும் விதத்தில் பல்வேறு மாற்றங்கள் அனுதினமும் ஏற்பட்டு வருகிறது. அதிலும் ஆண்ட்ராய்ட் போன்களின் வருகைக்கு பிறகு பலரும் தங்களுக்கு பிடித்த தனி உலகத்தில் வாழ்ந்தே தான் வருகின்றார்கள்.

முன்பை போல இல்லாமல் கடந்து வந்த விஷயங்களை நினைவில் வைத்து பார்ப்பதற்காகவே தங்களது செல்போன்களில் க்ளிக் செய்து விட்டு,  அதை வீடியோ பதிவாக பிடித்தும் வருகின்றனர்.

இப்படி எடுக்கப்பட்ட பிக்சர்கள், வீடியோக்கள் பலவற்றை தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றி விடுவதும் பழக்கமாகத் தான் இருக்கிறது. விளையாட்டாக செய்யும் சில விஷயங்கள் பல நேரத்தில் வினையாகி விடுகிறது. இது போன்ற வீடியோ மோகத்தால் சில நேரங்களில் உயிர் பலியான சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறியும் உள்ளது.

செல்ஃபி மோகத்தால் விபத்துக்களும், அதனால் மீளமுடியா காயங்களும் தீராத சோக நிகழ்வுகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில்  பாலத்தில் வீடியோ எடுக்க தம்பதியர் முற்பட்ட போது எதிரே ரயில் வந்ததால் பயத்தில் தொன்னூறு அடி பள்ளத்தில் குதித்த வீடியோ இப்போது வைரலாக பரவி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Train Couple
Train Couple

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் உள்ள கோரம் காட் ரயில் பாலத்தில் ஒரு தம்பதியர் போட்டோ, வீடியோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தனர். ரயில் அந்த நேரத்தில் வரும் என்பது தெரியாத தம்பியதியர் ரயிலை பார்த்ததும் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகே இருந்த தொன்னூறு அடி பள்ளத்தில் குதித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இருவருக்கும் தீவிர சிகீட்சை வழங்கப்பட்டு வரும் நேரத்தில் கனவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. காயமடைந்துள்ள மனைவிக்கும் தொடர் சிகீட்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஷூட்டிங் மோகத்தால் நேர்ந்துள்ள இந்த விபரீத விபத்து பற்றிய வீடியோ வைரலாக பரவி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!