---Advertisement---

பழைய மொபைல், கணினிகளை தூக்கி எறியாதீர்கள் – அதில்தான் தங்கம் இருக்கிறது!

By Sri
Published on: August 20, 2025
---Advertisement---

நம்மில் பலர் பழைய மொபைல் போன் அல்லது பிசி, லேப்டாப் வேலை செய்யாமல் போனவுடன் உடனே குப்பைக்கு தூக்கி எறிவோம். “இதில் என்னதான்  இருக்க போகுது ” என்று  அலட்சியமாக தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அந்த சின்ன சின்ன சிப் (chips), சர்க்யூட் போர்டு (circuit board), கனெக்டர்கள் (connectors) என அனைத்திலும்  நிஜமாகவே  தங்கம் ஒளிந்து உள்ளது  .

ஏன் தங்கம்? காரணம் எளிது – தங்கம் எளிதில் கெடாது, மங்காது, மின்சாரத்தை மிக சிறப்பாக கடத்தும். அதனால்தான் மொபைல், கணினி போன்ற சாதனங்களில் உள்ள முக்கிய பின்கள், கனெக்ஷன்களில் தங்கம் பூசப்பட்டிருக்கும். ஒரு மொபைலுக்குள் சில மில்லிகிராம் தங்கம் தான் இருக்கும். ஆனாலும் உலகம் முழுக்க பில்லியன் கணக்கில் சாதனங்கள் உள்ளதால், “மின்னணு கழிவு மறுசுழற்சி (e-waste recycling) மூலம் பெரிய அளவிலான தங்கம் கிடைக்கிறது. 

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இது “நகர்ப்புற சுரங்கம்(Urban Mining)” என்று அழைக்கப்படுகிறது. நிலத்திலிருந்து தங்கம் எடுப்பது போல, நகரங்களில் பழைய மொபைல், பிசி போன்ற சாதனங்களிலிருந்து தங்கம் மீட்கப்படுகிறது. ஒரு மில்லியன் மொபைல்களை உருக்கினால் கிலோக் கணக்கில் தங்கம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆனால் இது வீட்டு வேலை அல்ல. பழைய மொபைலில் இருந்து தங்கம் எடுக்கும் முறை இரசாயன செயல்முறை தேவைப்படும். பாதுகாப்பு வசதி இல்லாமல் முயற்சித்தால் ஆபத்து. அதனால்தான், இதை அதிகாரப்பூர்வ “மின்னணு கழிவு மறுசுழற்சி மையங்கள்” (e-waste recycling centers)-ல மட்டுமே செய்கிறார்கள்.

நாம் செய்யக்கூடியது என்ன? பழைய மொபைல், கணினி, லேப்டாப் எதையும் தூக்கி எறியாமல், அதிகாரப்பூர்வ, “மின்னணு கழிவு மறுசுழற்சி மையங்களில் ” ஒப்படைக்க வேண்டும். இது சுற்றுச்சூழலையும் காப்பதோடு, மறைந்திருக்கும் தங்கம் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்களையும் மீட்டெடுக்க உதவும்.

அடுத்த முறை உங்கள் மொபைல் வேலை செய்யாமல் போனால், அதை குப்பையில் போடாதீர்கள். யாருக்குத் தெரியும், உங்கள் கையிலேயே ஒரு தங்கச் சுரங்கம் இருக்கலாம்!


Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!