---Advertisement---

‘சிந்துபாத்’ மற்றும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கும் சிக்கல்!

By Sri
Published on: April 21, 2019
'சிந்துபாத்' மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' படத்துக்கும் சிக்கல்
---Advertisement---

விஜய் சேதுபதி நடித்து, அருண்குமார் இயக்கிய படம் ‘சிந்துபாத்’. ‘கே.புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும், ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சனும் இணைந்து தயாரிக்கும் படம் இது. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, அஞ்சலி நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், மே 16ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், சிவகார்த்திக்கேயன் நடிப்பில் தயாராகி உள்ள படம் Mr. லோக்கல். ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம். இப்படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
யோகிபாபு, ராதிகா போன்ற பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மே 16, சிந்துபாத் படம் ரிலீஸாகவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், மே 17ம் தேதி Mr.லோக்கல் படத்தை வெளியிட அப்பட நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனால், சிந்துபாத் பட நிறுவனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Mr.லோக்கல் படம் வெளியாகும் நிலையில், சிந்துபாத் படத்துக்கான தியேட்டர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால், சிந்துபாத் படத்தின் ரிலீஸை மாற்றி வைக்க முடிவு எடுத்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.