---Advertisement---

இன்றைய பட்ஜெட் முழு விபரம்

Published on: August 13, 2021
---Advertisement---

2021 மற்றும் 2022க்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு

நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.75 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

– நடப்பு நிதி ஆண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.50 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

– வணிக வரி, பத்திரப்பதிவு, மோட்டார் வாகன வரி போன்ற துறைகளில் வரி சீரமைப்பை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருகிற நிதி ஆண்டில் இந்தத் துறையின் மூலம் வரி வருவாயை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்வோரைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

1. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

2.

பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு மூலம் லிட்டருக்கு 3 ரூபாயைக் குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இது உழைக்கும் வர்க்கத்திற்கு பயனளிக்கக்கூடிய அறிவிப்பு.

– இதனால் தமிழக அரசின் பெட்ரோல் வரி வருவாயில் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி இழப்பு.

 

3.

பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்காக பயனாளிகளைத் தேர்வு செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு குடும்பத் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என சிலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதையடுத்து பலரும் குடும்ப அட்டைகளில் பெண்களை குடும்பத் தலைவராக மாற்ற முயற்சி செய்துவருகிறார்கள். ஆனால், இது தேவையற்றது.

– பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற செய்தி தவறானது. குடும்பத் தலைவரின் புகைப்படத்தை மக்கள் மாற்றம் செய்ய வேண்டாம்.

 

4.

மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழகமெங்கிலும் நடைபாதைகள் அமைப்படும். காத்திருப்புப் பட்டியல்களில் இருக்கும் 9,173 பேருக்கு தலா ரூ.1,500 பராமரிப்புத் தொகையாக உடனே வழங்கப்படும்.

5.இளைஞர்கள் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

6.முனைவர் பட்ட கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு.

7.அங்கன்வாடி நிலையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ. 48.48 நிதி ஒதுக்கீடு.

8.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி நிதி ஒதுக்கீடு.

9.ஆதி திராவிடர் பழங்குடியினர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்காக ரூ.14,964 கோடி நிதி ஒதுக்கீடு.

10. கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களை அமைக்க ரூ.123.02 கோடி நிதி ஒதுக்கீடு.

11.குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துக்காக ரூ.2,536.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன

மேலும்

ரூ.626 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் இந்த அரசால் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இலவச பள்ளிச்சீருடைகள் வழங்குவதற்காக ரூ.409.30 கோடிநிதி ஒதுக்கீடு,.

மகப்பேறு விடுமுறை நாட்கள் 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும். வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு.

100 கோயில்களில் ரூ.100 கோடி செலவில் குளம் மற்றும் தேர் சீரமைக்கப்படும்.

இப்படி பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.