---Advertisement---

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

By Sri
Published on: April 22, 2019
விஜய் சேதுபதியின் 'லாபம்' படப்பிடிப்பு இன்று ஆரம்பம்
---Advertisement---

விஜய் சேதுபதியை வைத்து, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்ற படத்தை இயக்கிய எஸ்.பி ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ என்ற படத்தை எடுக்கவுள்ளார்.

இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் வில்லனாக, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கவுள்ளார். இவர்களுடன், காமெடி நடிகர் சதீஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த பூஜையில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

முதல்கட்ட படப்பிடிப்பு, தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வெளியான நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிந்துபாத்’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Tragic End To Legend : "என் அருமை நண்பர்!" - விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மரணம்; கதறி அழுத ரஜினிகாந்த்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.