---Advertisement---

தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட 5 சிறந்த டெப்யூ படங்கள்

By Sri
Published on: August 20, 2025
Kollywood directors
---Advertisement---

முதல் படம்”ன்னா சும்மா ஒரு டெப்யூ கிடையாது. அது ஒரு இயக்குநரின் உள்ளக் குரல், அவர் சொல்ல வர்ற திரைமொழி, அவர் சினிமாவைப் பார்க்கும் பார்வை. எழுபதுகளும் எண்பதுகளும் சேர்ந்து நம்ம தமிழ் சினிமாவுக்கு ஆத்மாவாகவே  மாற்றிய காலம். அந்த காலத்துல, ஹீரோ, ஹீரோயின், பாடல், சண்டைன்னு பக்கா ஃபார்முலா தான் ஓடிக்கிட்டிருந்தது. ஆனா அந்த மாதிரி ரூட்டில் போகாமல், “சினிமாவே   வாழ்க்கை!”ன்னு புது பாதைத் திறந்த சில பேர் வந்தாங்க. அவர்களோட முதல் படங்களே இன்று வரை ரசிகர்கள் மனசுல வாழ்ந்துகொண்டிருக்கு.

கே. பாலச்சந்தர் — நீர்க்குமிழி (1965)

Neerkumizhi
Neerkumizhi – Balachandar

மேடை நாடகத்திலிருந்து திரைக்கு வந்த பாலச்சந்தர், நீர்க்குமிழிலேயே தனது தனிச்சுவையை காட்டினார். கூர்மையான உரையாடல்கள், வலிமையான பெண் கதாபாத்திரங்கள்—அவருடைய கைஎழுத்து அங்கிருந்தே தெளிவாய்ப் பளிச்சிட்டது.
தாக்கம்: பிறகு வந்த அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், வருமையின் நிறம் சிவப்பு எல்லாமே சமூகச் சிக்கல்களை நேரா நம்ம முன்னாடி நிறுத்தின. தமிழ் சினிமாவை “மக்களின் குரல்” ஆக்கிப் போட்டவர் இவர் தான்.

பாரதிராஜா — பதினாறு வயதினிலே (1977)

Bharathiraja
16_vayathinile Bharathiraja

மண் வாசனையோட புது புது கதைகளை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே—ஒரு கிராமத்து பையனின் கனவுகளும், உணர்வுகளும், சின்னச் சின்ன உறவுகளும் கலந்த கலவை. அப்போ வரை சினிமால “ரியலிஸம்”ன்னு எதுவுமே தெரியாத நிலை; அதைக் கலைத்து வைத்தார்.
தாக்கம்: சிகப்பு ரோஜாக்கள் , மண்ணில் உறுதி வேண்டும், கிழக்குச் சூரியன்—இவையெல்லாம் அவரது தனி பாணியை மேலும் வலுப்படுத்தின. “கிராமம்”னு சொன்னா, பாரதிராஜாவின் கையெழுத்து தான்” ரசிகருக்கு முதல்ல நினைவுக்கு வரும்.

பாலுமகேந்திரா — அழியாத கோலங்கள் (1979)

Azhiyatha Kolangal
Balumahendra – Azhiyatha Kolangal

கேமராமேனிலிருந்து இயக்குநராக வந்தவர். அழியாத கோலங்கள்—ஒரு பெண்ணின் உள் உணர்ச்சிகளை மெளனத்திலேயே சொல்லி வைத்த படம், காட்சிகளே கவிதை போல பாயும்.  பாலுமகேந்திரா படங்களைப் பார்ப்பது, ஒளியோட உரையாடல் கேட்பது மாதிரி.
தாக்கம்: மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம்—அனைத்தும் உணர்ச்சிகளின் நெருக்கமான வெளிப்பாடுகளே. தமிழ் சினிமாவுக்கு “விசுவல் போயட்ரி”னு சொல்லக்கூடிய பாணியை அவர் தான் அறிமுகப்படுத்தினார்.

கே. பாக்யராஜ் — சுவரில்லாத சித்திரங்கள் (1979)

எழுத்தாளர், நடிகர், இயக்குநர்—அனைத்தையும் ஒரே கையில வைத்த பாக்யராஜ். சுவரில்லாத சித்திரங்கள்ல நம்ம வீட்டுப் பிரச்சினைகளையும், சாதாரண மனிதனின் சின்னச் சின்ன கஷ்டங்களையும், சிரிப்பு கலந்த பாணியில் சொன்னார். மிடில் கிளாஸ் ரசிகர்களுக்கு ரொம்ப நெருக்கமாய்ப் போய்ச் சேர்ந்தது. 
தாக்கம்: அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, ஓரு கைநோட்டு—சிரிப்பிலும் கண்ணீரும் கலந்து ஓடும் பாணி. பாக்யராஜ் வந்த பிறகு தான் “குடும்பம், சிரிப்பு, மெசேஜ்” எல்லாம் சேர்ந்து ஹிட் பண்ணும் பாணி உருவானது.

மணிரத்னம் — பகல் நிலவு (1985)

நகர வாழ்க்கையை ரியலாகவும் ஸ்டைலாகவும் காட்டத் தொடங்கியவர். பகல் நிலவுலேயே அந்த சாயல் தெரியும். காட்சியமைப்பு, பாடலின் காட்சி மொழி, உறவுகளின் சிக்கல்—எல்லாமே புதிது.
தாக்கம்: மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம்—தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு போன படிகள். மணிரத்னம் தான் “நவீன தமிழ் சினிமா”வுக்கு அடித்தளம் அமைத்தவர்.

இவை எல்லாம் சாதாரண டெப்யூக்கள் இல்லை. பாலச்சந்தர் சமூகத்தை கண்ணாடியில் காட்டினார், பாரதிராஜா கிராமத்தை ஹீரோ ஆக்கினார், பாலுமகேந்திரா காட்சியிலேயே கவிதை எழுதினார், பாக்யராஜ் நம்ம வீட்டு கதைகளை சினிமாவாக்கினார், மணிரத்னம் நகரத்தின் கனவுகளை உலகத் தரத்துக்கு எடுத்துச் சென்றார். இவர்களின் முதல் படங்கள் தான் தமிழ் சினிமாவுக்கு புதிய சுவாசம். அதான் இன்றைக்கும் இந்த படங்கள் ரசிகர்கள் மனசுல எவர்கிரீன் மாதிரி ஒலித்துக் கொண்டே இருக்கு.


Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!