நடிகர் பார்த்திபன் தான் இயக்கும் படங்கள் மட்டுமின்றி தான் நடிக்கும் படங்களிலும் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிப்பவர். தற்போது இவர் புதியதான படம் ஒன்றில் நடிக்கிறார்.
துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்தி பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில்.
இவர் கல்லல் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார்.
படத்துக்கு பெயர் யுத்த சத்தம் என வைக்கப்பட்டு நேற்று விஜய் சேதுபதியால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
பார்த்திபனுடன் கெளதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார். டி. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.







