---Advertisement---

அதிகாரிகள் வற்புறுத்தியதால் கையெழுத்து…அமைச்சர் மீதான வழக்கில் சாட்சி அதிரடி திருப்பம்…

Published on: July 9, 2024
Crusher
---Advertisement---

கடந்த 2006 – 2011ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்து வந்தார் பொன்முடி. அப்போது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் ரூ.28.36 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் கிராம உதவியாளர் மணி பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

Ponmudi
Ponmudi

விசாரணையின் போது அவர் கூறியது, சம்பவத்தன்று அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி புகார் தெரிவிக்கப்பட்ட இடங்களில் சோதனை நடத்த சென்றதாக மணி சொன்னார்.

சோதனை முடிவடைந்த பின்னர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே தான் கோப்புகளில் கையெழுத்திட்டதாக சாட்சி மணி சொல்லியிருந்தார். இந்த விசாரணையில் மணி திடீரென பிறழ் சாட்சியாக மாறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வரப்படும் இந்த வழக்கில் இதுவரை முப்பத்தி நாலு பேர் அரசு தரப்பு சாட்சியமாக சாட்சியளித்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் சாட்சியளித்தவர்களில் இதுவரை இருபத்தி ஏழு பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் மீதான விசாரணையில் முன்னாள் கிராம உதவியாளர் மணியும் தற்போது  பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!