பிக்பாஸ் சீசன் 4 ஐ கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்ற செய்தியை விஜய் டிவி தரப்பு மறுத்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானது பிக்பாஸ் தமிழ். மிகப்பெரிய ஆதரவுடன் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனி முத்திரைப் பதித்துள்ளது இப்போது. அதற்குக் காரணம் அதைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்தான். கலகலப்பாகவும் போட்டியாளர்களுக்கு சரியான முறையில் அறிவுரைகள் வழங்கியும் அவர் நிகழ்ச்சியை நடத்தும் விதம் ரசிகர்களைக் கவர்ந்தது. அதனால்தான் மற்ற மொழிகளில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பிரபலங்கள் தொகுத்து வழங்கிவந்த நிலையில் தமிழில் மூன்று சீசன்களையும் கமல் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சீசன் 4 ஐ இந்தியன் 2 படப்பிடிப்பினாலும், சட்டமன்றத் தேர்தல் பணிகளாலும் கமல் தொகுத்தளிக்க மாட்டார் எனவும் அதே போல இந்தியில் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் கலர்ஸ் தொலைக்காட்சியின் கிளை நிறுவனமான கலர்ஸ் தமிழ்தான் ஒளிபரப்பும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த இரு தகவல்களையும் விஜய் டிவி தரப்பு தற்போது மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.







