---Advertisement---

விவேக் மரணத்தில் மர்மம்- விசாரிக்க கோரிக்கை

Published on: August 25, 2021
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

விவேக் இறப்பதற்கு முதல் நாள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அதனால்தான் அவர் இறந்தார் என்று சிலர் கூறினர்.

இதனை முற்றிலும் மறுத்த சுகாதராத்துறையினரும் அரசும் தடுப்பூசியால் ஒன்றும் இல்லை என தெரிவித்தது.

இந்த நிலையில் விவேக் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க விழுப்புரத்தை சேர்ந்த விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இறந்தார். அவருக்கு முறையான பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடவில்லை. எனவே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இவரது புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.