---Advertisement---

சூடுபிடிக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தல்…திரும்பி பார்க்க வைத்த தி.மு.க!….பாய காத்திருக்கும் பா.ம.க!

Published on: June 19, 2024
DMK PMK
---Advertisement---

விக்ரவாண்டி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராகம் களமிறங்கி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனை காலியாக இருந்த இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி இதன் வேட்பாளர்களே முக்கியமானவரிகளாக பார்க்கப்படுகின்றனர். பா.ம.க. சார்பாக சி.அன்புமணி போட்டியிருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர்.அபிநயா பொன்னி வளவன் போட்டியிடுகிறார்.

vikravandi
vikravandi

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கனிசமான் வாக்குகளை பெற்றதால் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைத்தது. அதே போல தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.காவிற்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. ஆனால் திராவிட முன்னேற்ற கழகமோ அபார வெற்றி பெற்றது. ஆளும் கட்சி என்ற அசுர பகத்தோடு இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது திமுக.

அன்னியூர் சிவா திமுகவின் சார்பில் போட்டியிருகிறார். தனது மனுவை தாக்கல் செய்தார் சிவா. மனு தாக்கல் செய்ய அவர் செல்லும் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் பொது மக்கள் என வழி நெடுக நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அன்னியூர் சிவா. விக்ரவாண்டி தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. விரைவில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.