---Advertisement---

விக்ரம் படம் பார்த்தபோது திரை தீப்பிடித்தது

Published on: June 8, 2022
---Advertisement---

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த படத்தில் கமல், பஹத் பாஸில், விஜய் சேதுபதி முதலானோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படம் புதுச்சேரியில் உள்ள ஜெயா என்ற திரையரங்கில் நேற்று ஓடிக்கொண்டிருந்தது.இந்த தியேட்டர் புதுச்சேரியில் உள்ள காலாடிப்பட்டு என்ற இடத்தில் உள்ளது.

நேற்று இப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது திரையின் ஒரு பக்கம் தீப்பிடித்து எரிந்தது. உடனே மள மள என்று பற்றி திரை எரிந்தது. இதனால் இதை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் படம் பார்த்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வேகமாக ஓடினர். இதனால் தீயணைப்புதுறையினர் வந்து தீயை அணைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.