---Advertisement---

விஜயகாந்த் உடல்நிலை குறித்து முதல்வர் விசாரிப்பு

Published on: September 24, 2020
---Advertisement---

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக வீட்டில் ஓய்வில் உள்ளார். நேற்று அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இன்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்துக்கு லேசான கொரோனா, நல்ல நிலையில் அவர் உள்ளார் அவருக்கு ஒன்றும் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வரான திரு.எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்தின் மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த்தை தொடர்புகொண்டு விஜயகாந்த்தின் உடல் நலன் குறித்து விசாரித்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.