மாஸ்டர் படத்தில் கல்லூரி விரிவுரையாளராக நடித்திருக்கும் விஜய்யின் பெயர் உள்ள ஐடி கார்டு புகைப்படம் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதையடுத்து படத்தின் டிரைலர் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜான் துரைராஜ்’ என்பதும், அவர் பணியாற்றும் கல்லூரியின் பெயர் ‘செயிண்ட் ஜெப்ரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பதும் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக படத்தில் விஜய் பயன்படுத்தும் ஐடி கார்டு புகைப்படம் வெளியாகியுள்ளது.








