---Advertisement---

வாழ்நாள் சாதனை விருது பெறும் – பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்

By Sri
Published on: September 18, 2025
Nadigar Sangam
---Advertisement---

எம் என் ராஜம் – தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள எம்.என்.ராஜம் சுத்தமான தமிழ் உச்சரிப்பும்,  தமிழ் வசனங்களை சரியான தோரணையுடன் பேசுவதில் கைத்தேர்ந்தவர்.

இவர் ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, அரங்கேற்றம், பாசமலர்,  நாடோடி மன்னன் என்ற எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.  M. G. R, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்கள் முதல் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை இவர் நடித்துள்ளார்.

இவருக்கு “தென்னிந்திய நடிகர் சங்கம்” ஒரு கௌரவ விருதை வழங்கயுள்ளது.  இவரின் நீண்ட கால திரைப்பயணத்திற்காகவும் மற்றும் சினிமாவுக்காக இவர் அர்ப்பணித்த உழைப்பிற்காகவும், நடிகர் சங்கம் இவருக்கு “வாழ்நாள் சாதனை விருது” வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

M.N. Rajam
M.N. Rajam – Lifetime Achievement Award

செப்டம்பர்-21 ஆம் தேதி நடைபெறவுள்ள, நடிகர் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில், அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை எம்.என் ராஜன் கடந்த ஜூலை, தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் உள்ள அனைத்து மூத்த நடிகர்களும், பல பிரமுகர்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!