---Advertisement---

தடுப்பூ சி செலுத்தலேன்னா கூகுள்ள வேலை இல்லை- புது அறிவிப்பு

Published on: December 15, 2021
---Advertisement---

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. இதனால் பல தனியார் மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. அந்த வகையில் கூகுளும் தனது பணியாளர்களை வீட்டிலிருந்து ஆன்லைனில் பணிபுரிய உத்தரவு பிறப்பித்திருந்தது.

பின்னர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன. தற்போது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பல நாடுகளில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி முதல் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரிய கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,  பணிக்கு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அந்நிறுவனம் விதித்துள்ளது.

செலுத்தாதவர்கள் ஜனவரி 18 முதல் 30 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதுவரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அதன் பின்னர் 6 மாதங்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு வழங்கப்படும். அதன் பின்னரும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Title and first look reveal announcement of the upcoming Arun Vijay movie under Nethaji Productions.

நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய்: படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு!

Official first look poster of the movie Baththa starring Vijay Sethupathi.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Official trailer release of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் அதிரடியான அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியீடு: மிரட்டலான காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள்!

Trailer release announcement poster of the movie Irumudi releasing today at 6:03 PM.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் மாஸான டிரெய்லர் இன்று மாலை 6:03 மணிக்கு வெளியீடு: அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!

Independence Day special movies telecast announcement on Vijay TV.

துரந்தர், லீடர், வித் லவ்: சுதந்திர தின சிறப்பு விருந்தாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அதிரடி திரைப்படங்கள்!

Trailer release announcement poster of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் மிரட்டலான டிரெய்லர் நாளை காலை வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!