சமீபத்தில் உ.பியில் ஹாத்ராஸ் என்ற இடத்தில் ஒரு பெண் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விசயத்திற்காக நாடு முழுவதும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் திமுகவும் இதை எதிர்த்து பேசி வருகிறது. இன்று போராட்டம் என்று கூட அறிவித்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக செயலாளரும் நடிகையுமான ஜெயலட்சுமி,உ.பி யில் நடந்த விஷயத்திற்க்க்காக குரல் கொடுக்கும் திமுக… திமுக நிர்வாகிகளால கற்பழித்து கொலைசெய்யப்பட்ட சசிகலாவிற்க்காக குரல் கொடுக்க ஏன் முன்வரவில்லை? சசிகலா குடும்பத்திற்கு நியாயம் கேட்டு சைதாப்பேட்டில் இன்று சசிகலாவின் தாயாருடன் கைதானேன். என்று டுவிட்டியுள்ளார்.







