தமிழ்நாட்டில் சுங்கச்சாவடியில் ஏற்படும் தகராறுகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. எல்லா மாநிலத்தையும் விட தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக தேவையில்லாத இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.
இதை ஆளும் அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் உள்ளது. மதுரையில் இருந்து இராமேஸ்வரம் வரும் வழியில் பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை உள்ளது அதற்கு பிறகு சாதாரண சாலைதான் வருகிறது. ஆனால் பரமக்குடி அடுத்த சத்திரக்குடியில் சாதாரண சாலைக்கு சுங்கச்சாவடி உள்ளது.
சுங்கச்சாவடி விசயத்தில் நீண்ட நாட்களாக பேசி வரும் சீமான் என்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே நாள் இரவில் அனைத்து சுங்கச்சாவடியையும் ஜேசிபி கொண்டு அழித்து விடுவேன் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.













