---Advertisement---

Thambi Ramiah Vijay TVK : “டீசரை பார்த்து முடிவு பண்ணாதீங்க” – ஆதிவ் அர்ஜுனாவுக்கு தம்பி ராமையா கொடுத்த செம பதிலடி!

By Sri
Published on: April 4, 2026
A visual comparison featuring Thalapathy Vijay, Aadhav Arjuna, and the TN 2026 movie poster starring Natty.
---Advertisement---

தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு பரபரப்பை கிளப்பும் தம்பி ராமையா இப்போ ஒரு புது பஞ்சாயத்துல சிக்கியிருக்காரு. தன்னோட மகன் உமாபதி இயக்கத்துல உருவான ‘TN 2026’ படத்தோட டீசர் ரிலீஸான உடனே அது விஜய் சாரையும் அவரோட கட்சியையும் கிண்டல் பண்ற மாதிரி இருக்குன்னு ஒரு பேச்சு கிளம்புச்சு. இதப்பத்தி தமிழக வெற்றி கழகத்தோட முக்கிய புள்ளி ஆதிவ் அர்ஜுனா சில கேள்விகளை எழுப்ப அது இப்போ கோலிவுட்ல பெரிய விவாதமா மாறியிருக்கு.

தம்பி ராமையா, ‘நான் ஏற்கனவே ஆதிவ் அர்ஜுனா கிட்ட பேசினதா’ ஒரு தகவலையும் வெளியிட்டு இருக்காரு. அதுல அவர் சொன்ன விஷயம் ரொம்பவே முக்கியமானது. “ஆதிவ் அர்ஜுனா தம்பிக்கு என்னோட ஒரு வேண்டுகோள் என்னன்னா, வெறும் டீசரை மட்டும் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க, அப்படின்னு ரொம்ப நிதானமா சொல்லியிருக்காரு. இந்த படம் விஜய் சாரையோ அவரோட கட்சியையோ ஒரு சின்ன இடத்துல கூட அட்டாக் பண்ணாதுன்னு” அடிச்சு சொல்லியிருக்காரு.

தளபதி கூட இருந்த நட்பு மறக்க முடியுமா… நாங்க ஏன் அவரை கிண்டல் பண்ணப்போறோம், அப்படின்னு கேட்ட தம்பி ராமையா, சில பழைய நினைவுகளையும் அங்க ஞாபகப்படுத்தினாரு. நான் விஜய் தம்பி கூட மூணு படங்கள்ல நடிச்சிருக்கேன். அதே மாதிரி இந்த படத்தோட ஹீரோ நட்டி நட்ராஜ் அவரோட ‘யூத்’ மற்றும் ‘புலி’ படங்கள்ல கேமராமேனா ஒர்க் பண்ணிருக்காரு. இவ்வளவு நெருக்கமான நட்பு இருக்கும்போது நாங்க எப்படி தப்பா யோசிப்போம் அப்படின்னு ஒரு லாஜிக்கான கேள்வியை வச்சாரு.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அரபிக்குத்துனா என்ன தெரியுமா- விஜய், அனிருத், சிவகார்த்திகேயன் , நெல்சன் பேசிக்கொண்ட சுவையான பீஸ்ட் அப்டேட்
Actor Thambi Ramaiah and Natty Natraj clarify their stand on TN 2026 movie regarding Actor Vijay TVK party.
விஜய் மற்றும் டிவி்கே கட்சியினரை ‘TN 2026’ படம் விமர்சிக்கவில்லை என தம்பி ராமையா விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தம்பி மேல எங்களுக்கு எப்பவும் ஒரு பெரிய மரியாதை இருக்கு அப்படின்னும் அவர் சொல்லியிருக்காரு. டீசரை பார்த்துட்டு விமர்சனம் பண்றது இயல்புதான் ஆனா முழு படத்தையும் பார்த்தா கண்டிப்பா உங்க எண்ணம் மாறும் அப்படின்னு உறுதியா நம்புறாரு தம்பி ராமையா. படம் ரிலீஸான பிறகு நீங்களே எனக்கு போன் பண்ணி சாரி கேப்பீங்க அப்படின்னு ஒரு சவாலையும் ஆதிவ் அர்ஜுனாவுக்கு விடுத்திருக்காரு.

ஆதிவ் அர்ஜுனாவுக்கு கொடுத்த அந்த வாக்குறுதி… நீங்க எப்பவும் இருந்த கட்சிகளுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பீங்க அது எனக்கு நல்லாவே தெரியும் அப்படின்னு ஆதிவ் அர்ஜுனாவை புகழ்ந்த தம்பி ராமையா, இந்த படம் உங்க மனசை ஒரு போதும் புண்படுத்தாது, அப்படின்னு சத்தியம் பண்ணாத குறையா சொல்லியிருக்காரு. அரசியல் சூழ்நிலையில எலக்சன் டைம்ல வர்றதுனால சில சந்தேகங்கள் வர்றது சகஜம்தான் அப்படின்னும் அவர் ஏத்துக்கிட்டாரு.

ஆனா சினிமாங்கிறது வேற, அரசியல்ங்கிறது வேற, அப்படின்னு தெளிவா பிரிச்சு காட்டியிருக்காரு தம்பி ராமையா. இந்த படம் ஒரு ஜாலியான அதே சமயம் மெசேஜ் சொல்ற படமா தான் இருக்கும் அப்படின்னு அவர் தரப்புல இருந்து விளக்கம் வந்திருக்கு. இப்போதைக்கு விஜய் ரசிகர்களும் டிவி்கே நிர்வாகிகளும் இந்த விளக்கத்தை எப்படி எடுத்துக்க போறாங்க? அப்படிங்கிறது தான் இப்போதைய மெயின் மேட்டர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆகஸ்ட்டில் ஷூட்டிங்… பொங்கல் ரிலீஸ் – சுடசுட தளபதி 65 அப்டேட் !

படம் வந்தா உண்மை தெரிஞ்சுடும்… ஏப்ரல் 10-ம் தேதி படம் ரிலீஸாக போகுது அதுக்கு முன்னாடி வர்ற இந்த மாதிரி சர்ச்சைகள் படத்துக்கு ஒரு விதத்துல ஹைப் கொடுத்தாலும், தம்பி ராமையா இதை ஒரு எமோஷனல் விஷயமா தான் பார்க்குறாரு. தன்னோட மகன் கஷ்டப்பட்டு எடுத்த படம் எந்த விதமான அரசியல் சிக்கல்லயும் சிக்கக்கூடாது அப்படிங்கிறதுல அவர் ரொம்பவே குறியா இருக்காரு.

விஜய் சார் ரசிகர்கள் கிட்ட இருந்து வர்ற கமெண்ட்ஸையும், அவர் கவனிச்சுட்டு தான் இருக்காரு. அதனால தான் இவ்வளவு ஓப்பனா வந்து விளக்கம் கொடுத்திருக்காரு. ஆதிவ் அர்ஜுனா இதுக்கு மேல இந்த விஷயத்தை பெருசு பண்ணாம படம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவாரு அப்படின்னு தான் கோலிவுட் வட்டாரத்துல பேசிக்கிறாங்க. தம்பி ராமையாவோட இந்த லோக்கல் ஸ்டைல் விளக்கம் இப்போ சோசியல் மீடியாவுல செம வைரல்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!