---Advertisement---

இசையமைப்பாளர் தமனின் பெருமிதம்

Published on: April 12, 2021
---Advertisement---

இசையமைப்பாளர் தமன் தமிழில் பாய்ஸ் படத்தில் மட்டும் நடித்தார். பின்பு பல படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.சில காலம் தமிழ் படங்களுக்கு இசையமைத்தார். தற்போதும் தமிழ் படங்களுக்கு இசையமைக்கிறார். இருந்தாலும் தமனுக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது.

அங்கு முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். சமீபத்தில் வந்த க்ராக் மற்றும் வக்கீல் சாப் படத்தில் எல்லாம் தமனின் பிஜிஎம் பிரமாதமாக இருப்பதால் தமனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கு தமன் நன்றி தெரிவித்துள்ளார். வெற்றியை தலைக்கு கொண்டு செல்ல வேண்டாம். தோல்வியை நேசியுங்கள். 45 நாட்கள் கடும் ஹோம் வொர்க் செய்ததன் வெற்றி அது என தன்னுடைய இசை வெற்றியடைந்ததற்கான காரணத்தை தமன் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.