---Advertisement---

Thalapathy Vijay Trichy Speech : “என் வலியையும் தாங்கி நிக்கிறேன்” – திருச்சியில் எகிறி அடித்த விஜய்!

Published on: April 2, 2026
TVK Leader Vijay addressing a massive political gathering in Tiruchirappalli for 2026 elections
---Advertisement---

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இப்போ பயங்கர அனல் பறக்க ஆரம்பிச்சிருக்கு. தமிழக வெற்றி கழகத்தோட தலைவர் விஜய், இன்னைக்கு திருச்சியில் வேட்புமனு தாக்கல் செஞ்சதுக்கு அப்புறம் நடந்த பொதுக்கூட்டத்துல செம மாஸா ஒரு ஸ்பீச் கொடுத்திருக்காரு. அவரோட பேச்சில ஆவேசமும் இருந்துச்சு, அதே சமயம் மக்கள்கிட்ட ஒரு உருக்கமான வேண்டுதலும் இருந்துச்சு. “இந்த தேர்தல் எனக்கானது இல்லை, உங்களுக்கானது. என்னோட வசிதியான வாழ்க்கையை எல்லாம் தூக்கி போட்டுட்டு உங்களுக்காக தான் இங்க வந்திருக்கேன்”னு விஜய் சொன்னப்போ திருச்சி மைதானமே அதிருச்சுன்னு தான் சொல்லணும்.

தன்னோட கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்துக்கு நடந்த முட்டுக்கட்டைகளை பத்தி விஜய் முதல் தடவையா இப்போ ஓப்பனா பேசியிருக்காரு. “கரூர் சம்பவத்துல இருந்து என் கடைசி படமான ‘ஜனநாயகன்’ வரைக்கும் நம்ம உறவை இன்னும் ஸ்ட்ராங் ஆக்குச்சு. ஆனா அந்த படம் இந்த தேர்தல்ல ஒரு பெரிய ஆயுதமா மாறிடும்னு பயந்து என்னை ஏமாத்திட்டாங்க. எனக்கும் நீதி வேணும்”னு விஜய் சொன்னது அவரோட ரசிகர்களுக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. படம் மூலமா சொல்ல நினைச்ச கருத்தை தடுத்தாலும், மக்கள் முன்னாடி நின்னு எல்லாத்தையும் உடைச்சு பேசுவேன்னு விஜய் காட்டியிருக்கிற தைரியம் இப்போ அரசியல் வட்டாரத்துல பெரிய விவாதமா இருக்கு.

தமிழகத்துல இப்போ இருக்குற எல்பிஜி (LPG) கேஸ் தட்டுப்பாடு பத்தி விஜய் ரொம்ப காட்டமா பேசினாரு. “கேஸ் தட்டுப்பாடு காரணமா எவ்வளவோ டீக்கடைங்க, ஹோட்டல்ங்க மூடிக்கிடக்கு. இதனால சாமானிய மக்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுருக்கு. நம்ம அரசாங்கம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருந்திருந்தா இந்த பிரச்சனையை தடுத்திருக்கலாம். ஆனா இப்போ இருக்குற முதலமைச்சர் கிட்ட கேட்டா, இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றாரு. அவரோட பெர்சனல் விஷயத்துக்காக டெல்லி போறவரு, ஏன் மக்களோட கேஸ் பிரச்சனைக்காக டெல்லி போய் பேசல?”னு ஸ்டாலின் சாரை நேரடியாவே அட்டாக் பண்ணியிருக்காரு விஜய்.

மக்களோட அடிப்படை தேவைகளை கவனிக்காம இருக்குற அரசுக்கு பாடம் புகட்டணும்னு விஜய் நினைக்கிறாரு. “100% ஒரு நியாயமான ஆட்சியை நம்ம கொடுப்போம். இந்த விஜய்யை நீங்க 100% நம்பலாம். நீங்க என் மேல வச்சிருக்கிற நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க”னு ஒரு குழந்தையா மாறி விஜய் கேட்டப்போ அங்கிருந்த மக்கள் எல்லாரும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டினாங்க. பொய் சொல்லி யாரையும் ஏமாத்த மாட்டேன், உங்களுக்காக எல்லா வலியையும் தாங்கிட்டு நிக்கிறேன்னு விஜய் சொன்னது இப்போ சோஷியல் மீடியாவில செம வைரலா போயிட்டு இருக்கு.

விஜய்யோட இந்த திருச்சி ஸ்பீச் மத்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய சவாலா அமைஞ்சிருக்கு. சாதாரண மக்களோட பிரச்சனையை கையில எடுத்துட்டு விஜய் பேசுற விதம், அவருக்கு இருக்குற கிரவுண்ட் சப்போர்ட்டை இன்னும் அதிகமாக்கும்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க. குறிப்பா அந்த ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தை விஜய் தேர்தல் ஆயுதமா மாத்துனது ஆளுங்கட்சிக்கு கொஞ்சம் தலைவலியை கொடுக்கும் போல தெரியுது. விஜய்யோட இந்த அதிரடி ஆட்டம் தேர்தல்ல எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டு வரப்போகுதுன்னு பொறுத்திருந்து தான் பாக்கணும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Trending news about TVK leader Thalapathy Vijay's potential first TV interview on Zee Tamil.

Vijay TVK Interview Buzz : என்னது.. ஜீ தமிழ்ல தளபதி வர்றாரா? ஏப்ரல் 14-ல் ‘மக்கள் நாயகன்’ – தீயாய் பரவும் வதந்தி!

TVK chief Vijay campaigning in Puducherry and DMK leader Jagathrakshakan's response on political maturity.

VIJAY TVK vs DMK : “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற நடிகர்” – புதுச்சேரியில் கிளம்பிய அரசியல் அனல்!

A visual showing TVK chief Vijay, CM MK Stalin, and AIADMK's EPS and Stalin during the 2026 election campaign.

TN Election 2026 : “விஜய்க்கு செக்.. ஸ்டாலின் அதிரடி” – வேட்புமனுவில் சிக்கிய விஜய்.. எடப்பாடியை வறுத்தெடுத்த முதலமைச்சர்.. பரபரக்கும் தேர்தல் களம்!

DMK strategist Sabareesan campaigning in Villivakkam for candidate Karthik Mohan and attacking TVK chief Vijay.

சபரீசன் vs விஜய் vs இபிஎஸ்: “விஜய்க்கு தன்னம்பிக்கை இல்லை.. கனிமொழிக்கு இடமில்லை” – அரசியலில் குதித்த கையோடு அதிரடி காட்டும் சபரீசன்! வறுத்தெடுத்த எடப்பாடி!

Udhayanidhi Stalin holding a roadshow before filing nomination in Chepauk 2026.

Udhayanidhi Stalin Assets Dip : “உதயநிதிக்கு குறைஞ்சிருக்கு.. கிருத்திகாவுக்கு ஏறியிருக்கு” – வேட்புமனுவில் செம ட்விஸ்ட்!

Young voters discussing 2026 Tamil Nadu elections and TVK leader Vijay

TN Election 2026 : “மாற்றம் வேணும்.. ஆனா?” – விஜய்யை நம்பும் இளைஞர்கள்; ஆட்டத்தை மாற்றும் ‘கிங்மேக்கர்கள்’!