நடிகர் அஜீத் 20 வருடங்களுக்கு முன் நடித்த தீனா படத்தில் தல தல என்று அந்த படத்தில் அவரை அழைத்ததால் அதையே அவரது ரசிகர்கள் நிரந்தரமாக்கி விட்டனர். ஆசை நாயகன் அஜீத்குமார், அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் என பல பட்டங்கள் அவருக்கு முன் இருந்தாலும் அதை எல்லாம் விடுத்து தல என்றே அவரது ரசிகர்கள் அவரை அழைக்க துவங்கினர்.
நாளுக்கு நாள் தல என அழைக்க தொடங்கிய ரசிகர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதனிடையே இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அஜீத் தன்னை அஜீத்குமார் என்றும் அஜீத் என்றும் ஏகே என்றோ அழைத்தால் போதுமானது தல என்ற அழைக்க வேண்டாம் என அஜீத் கூறியுள்ளார்.









