Latest News
4 நாட்களுக்குப் பிறகு… உயர்வை சந்தித்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது.
இந்தியாவில் தினம் தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது. அதிலும் ஜூலை மாதம் தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து ஒரு பவுன் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாகி வந்தது.
நாடாளுமன்றத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலமாக தங்கம் விலை சற்று குறைந்தது மக்களுக்கு ஆறுதல் கொடுத்தது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரை குறைக்கப்பட்டதால் தொடர்ந்து சங்கம் விலை சரிவை சந்தித்தது. ஆனால் சில நாட்களில் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.
சரியும்போது சொற்பமாக சரியும் தங்கம் விலை ஏறும்போது அதிக அளவில் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 53 ஆயிரம் ரூபாயை கடந்தது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு சவரன் 53 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்திருக்கின்றது. அதன்படியே 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 250 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,715 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.